புங்குடுதீவு,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் மயில்வாகனம் மதனராசா அவர்களின் நினைவாக,இடம்பெற்ற அறப்பணியின் விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவு,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் மயில்வாகனம் மதனராசா அவர்களின் நினைவாக,இடம்பெற்ற அறப்பணியின் விபரங்கள் இணைப்பு!

லண்டனில் காலமான, தீவகம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திரு மயில்வாகனம் மதனராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 29.06.2020 திங்கட்கிழமை அன்று-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

மேலும்அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,நமச்சிவாய பவுண்டேசன் ஊடாக,அண்மையில் தந்தையை இழந்து தவிக்கும்,ஜந்து குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக,தினமும் நாலு லீற்றர் பால் கறக்கக்கூடிய,பசுவும்,கன்றும்,அன்றைய (29.06.2020)தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதியினை, லண்டனில் வசிக்கும்,மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி மதனராசா கேமலதா அவர்கள் வழங்கியிருந்தார்.அத்தோடு நடக்கமுடியாத நிலையில்,நாலரை வயது குழந்தையுடன் கஸ்ரப்பட்டு வரும், பெண்ணுக்கு 15 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அன்னாரின் ஞாபகார்த்தமாக, யாழ்-தீவக பிரதான வீதியில்,மண்டைதீவு சந்திக்கருகில் பஸ் தரிப்பிடம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னார் மண்டைதீவைச் சேர்ந்த, திரு திருமதி சிவகுருநாதன்-நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லண்டனில் வசிக்கும்,திருமதி கேமலதா அவர்களின் அன்புக்
கணவரும்,சம்ஜா,விதுஷா,மதுஷா,ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux