யாழ் மண்டைதீவில் எக்கோ பீச் பார்க் என்ற பெயருடன் அன்றைய வடமாகான அரசினால், பல கோடி ரூபாக்கள் செலவில் உல்லாசக்கடற்கரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மண்டைதீவு உல்லாசக்கடற்கரையை நோக்கி 150க்கும் மேற்பட்ட சோலர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளியூட்டப்பட்டதுடன் மேலும் பல மில்லியன் ரூபாக்கள் பெறுமதியான உபகரணங்களும் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில்,இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இப்பகுதியில் பொருத்தப்பட்ட 150க்கும் மேலான சோலர் மின் விளக்குகள்,ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இன்றும் எரிந்து கொண்டிருப்பதாக மண்டைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்டைதீவு மக்களின் வேண்டுகோள்…
இப்பகுதியில் மக்களுக்கு பயன்தராது எரிந்து கொண்டிருக்கும் சோலர் மின் விளக்கு பொருத்தப்பட்ட கம்பங்களை பிடிங்கி ,மண்டைதீவின் பிரதான வீதிக்குப் பொருத்தித் தருமாறு மண்டைதீவிலிருந்து சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இம்முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக, வாக்குக் கேட்டு வரும்-அரசியல்வாதிகளிடம் முன் வைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





















































