
தீவகம் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்ட அமரர் திருமதி அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் 1ம் ஆண்டுத் திதி 30.05.2020 சனிக்கிழமை அன்றாகும்.
அன்னாரின் ஆண்டுத் திதியை முன்னிட்டு,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமரர் திருமதி அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இன்றோடு பன்னிரு மாதம்!!!
அம்மா! நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
உன் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

