டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ் – கொடிகாமத்தில் சம்பவம்!

டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ் – கொடிகாமத்தில் சம்பவம்!

கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொரோனா சந்தேக நபர்கள் நால்வரை ஏற்றி வந்த அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (26) மாலை தென்ராட்சி – காெடிகாமம், புத்தூர் சந்தியில் நடந்துள்ளது.

ஏ-9 வீதியால் கொரோனா சந்தேக நபர்களுடன் வந்த அம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் சென்ற டிப்பர் திடீரென திரும்பிய போது அம்புலன்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன்போது அம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

இதில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வேறு அம்புலன்ஸ் வாகனம் வரவளைக்கப்பட்டு அதில் ஏற்றி நோயாளிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux