அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி-படங்கள் இணைப்பு!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நாளான (18.5.2020) அன்று மாலை அல்லப்பிட்டி புனித பிலிப்புநேரியார் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பொது மக்களின் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிராவுன் நினைவாகவும் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இராணுவம், பொலிஸார் குறித்த அஞ்சலி நிகழ்வினை நடத்துவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டத்தரணிகளான க.சுகாஸ், ந.காண்டீபன், திருக்குமரன், சோபிதன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், வை.கிருபாகரன், தனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux