அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!


அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கொடிய வறுமையில் வாழும்,ஒரு கிராம மக்களுக்கு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-

அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப் பணியின் தொடர்ச்சியாக, 875 வது தடவையாக இச்சிறப்புணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெர்மனியில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு, திருமதி சுந்தரம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் 60வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், 15.05.2020 வெள்ளிக்கிழமை அன்று -கிளிநொச்சி யூனியன்குளம் குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும், அனைவருக்கும் (130 பார்சல்) சிறப்புணவு வழங்கப்பட்டது.

அறுபதாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும், திரு, திருமதி சுந்தரம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளுக்கு,இறையாசி வேண்டி,வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply