அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!


யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்ட அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஏழாமாண்டு நினைவாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஏகாம்பரம் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் அல்லைப்பிட்டியில் 110 குடும்பத்தினருக்கும் மண்டைதீவு கிழக்கில் 65 குடும்பத்தினருக்கும் தலா 1000ரூபாய் வீதம் 175000ரூபாய் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தினூடாகவும் மண்டைதீவு உதயசூரியன் சனசமூக நிலையத்தினூடாகவும் வழங்கப்பட்டது.
மேலும்
அன்னாரின் குடும்பத்தினரின் நிதி பங்களிப்பில், அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கொடிய வறுமையில் வாழும், கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் கிராம மக்களுக்கு (03.05.2020) அன்று 100 பார்சல்கள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் -இக்கிராமத்தில் வசிக்கும்,அனைத்துக் குடும்பங்களுக்கும்- 30 (குடும்பங்கள்)1500.00 ரூபாக்கள் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அரசி,மா,சீனி, பருப்பு,சோயா, தேங்காய், பிஸ்கட் உட்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு இம்மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை, வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply