
உலகம் முழுவதும் 180.000 மரணமடைந்த நிலையில், 46.000 பேரின் பலிகளை தாண்டியுள்ள அமெரிக்காவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.
ஐரோப்பாவில் மட்டும் 110.000 பேர் சாவடைந்துள்ளனர். இது சர்வதேசக் கொரோனாச் சாவுகளின், மூன்றில் இரண்டு மடங்காகும். சீனாவில் வுஹானில் உருவான கொரோனா வைரசினால், சீன நகரங்கள் பாதிக்கப்படாத நிலையில், ஐரோப்பாவும் அமெரிக்காவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
இந்நிலையில், பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்
24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 544 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் பலரும் தொடர்ச்சியாக கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு பலியாகி வருவதுடன்-மேலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களும்,கொரோனா வைரஸின் தாக்கத்திற்குள்ளாகி 22.04.2020 அன்று பரிஸ் வைத்தியசாலையில் காலமானார்.அவருக்கு ஈழத்து கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர.
– வைத்தியசாலையில் 336 பேர் சாவு
– வயோதிப இல்லங்களில் 208 பேர் சாவு
பிரான்சின் மொத்தச் சாவுகள் 21.340
வைத்தியசாலையில் மொத்தச்சாவுகள் 13.236
வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து மொத்தச் சாவுகள் 8.104 (+208)
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 29.741 (-365)
உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 5.218 (-215)
40.657 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நன்றி-பரிஸ் தமிழ் இணையம்