
பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, திரு செல்வராஜா ஜெகநாதன் (ஜெகன்) அவர்களின் நேரடி நிதி அனுசரணையில், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும்,சமூக ஆர்வலருமாகிய, திரு செல்லப்பா பார்த்தீபன் அவர்களின் தலைமையில் இந்த உலர் உணவுப் பொருட்கள்,மண்கும்பானில் வசிக்கும் மக்களின் இல்லங்கள் தேடிக் கொண்டு சென்று வழங்கப்பட்டன.
அரிசி, மா, சீனி, உட்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு, வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும்,
இப்பணியில் இப்பகுதி இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டு செயலாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்,



















