மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!


ஊரடங்கு நேரத்திலும், அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஆதரவற்ற முதியோர்களுக்கான அன்னதானப் பணி-852
யாழ் தீவகம் மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல புகையிலை வியாபாரியும்,மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவருமாகிய,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,12.04.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும், முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் மண்டைதீவில் தற்போது இடம்பெற்றுவரும் உலர்உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux