மன்னாரில் இடம்பெற்ற,விபத்தில் சகோதரிகள் இருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

மன்னாரில் இடம்பெற்ற,விபத்தில் சகோதரிகள் இருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில்,இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25)  ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கெப் வண்டியின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

61Shares

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.PartagerFacebookTwitterYahoo MailGmail


பிந்திய செய்திகள்

  • கொரோனா – பிரிட்டனில் முன்னைய இறப்புகளுடன் சேர்த்து, மேலும் 765 தொற்றாளர்கள் மரணம் என கணக்கிடப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 765 தொற்றாளர்கள் மரணிதுள்ளனர். இதனையடுத்து இறப்பு
  • தனிமைப்படுத்தலின் பின், கனடா பிரதமர் அமைச்சரவைக்  கூட்டத்தில் பங்குகொள்கிறார்.   கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ தனது தனிமைப்படுத்தலின் பின் முதன்முறையாக  அமைச்சரவைக்  கூட்டத்தை இன்று
  • தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் – ஜனாதிபதியின் செயலாளர்   தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை
  • வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!   ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காண
  • நாளையும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி   நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப
  • முல்லைத்தீவினைச் சேர்ந்த மூவருக்கும் கொரோனா இல்லை – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்   முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரிடம் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்
  • தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது!   தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை
  • 21 இலட்சம் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியது திருமலை நலன்புரிச் சங்கம்!   திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரால் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வறிய மக்க
  • அம்பாறையில் துரித நடவடிக்கையில் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு!   கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு இருவேறு கொடுப்பனவுகளை துரிதமாக வழங்கிவ
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு!   இலங்கையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக

#Tags


உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளனபெயர்*மின்னஞ்சல்*இணையம்

 Save my name, email, and website in this browser for the next time I comment.கருத்துரை*

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux