பிரான்ஸில் இளம் தமிழ் யுவதி உட்பட பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் பலி-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் இளம் தமிழ் யுவதி உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி-விபரங்கள் இணைப்பு!

யாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி [(உமாசுதன் சாம்பவி) வயது 31] 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil பகுதியில் கொரொனா தொற்றிற்கு இலக்காகி உயிரிந்துள்ளார்.

இவர் யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. . அத்தோடு உலகமெல்லாம் பல தமிழ் மக்கள் உயிரிழந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் கொடிய கொரோனா வைரஸால் இதுவரை 10,328 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும்
109,069 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களும் தொடர்ச்சியாக பலியாகி வருவது வேதனை தருவதாக ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மரணித்த அனைவரின் ஆத்மாக்கள் சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோமாக…Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux