அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக, 120 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக, 120 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக,இன்று (06.04.2020) திங்கட்கிழமை 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு,ஆலய தர்மகத்தா அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக,ஆலய தர்மகத்தா திருமதி நடேசபிள்ளை அவர்களினால்,120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பகுதி இளைஞர்களினால்,ஆலயத்தில் வைத்து அரிசி,மா,சீனி, உட்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு,கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது- பயனாளிகளின் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வழங்கி வைத்தனர்.

இவர்களுக்கு இனிச்சபுளியடி தேவஸ்தான தர்மகத்தா நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு-காலத்தின் தேவை கருதி உலர் உணவுப் பொருட்களை வழங்கிய இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான தர்மகத்தாவுக்கு பயனாளிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Leave a Reply