அல்லைப்பிட்டி மண்கும்பான் பகுதிகளில் -இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட-மீளக்குடியமர்ந்த-200க்கும் அதிகமான பயனாளிகளினால் அமைக்கப்பட்டு வந்த வீடுகட்டும் பணிகள் இம்மாதத்துடன் நிறைவடைய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அல்லைப்பிட்டியில் 145 வீடுகளும்-மண்கும்பானில் 45 வீடுகளும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட மாதிரி வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் வழங்கிய 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாக்களை விட மேலதிகமாக பல லட்சங்கள் செலவு செய்துள்ளதாக பலர் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.
அல்லைப்பிட்டியில் எமது செய்தியாளரினால் எடுக்கப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.
