
ஜெர்மனியில் வசிக்கும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு தில்லையம்பலம் திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை(15.12.2019) முன்னிட்டு, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு,(11.02.2020) செவ்வாய்க்கிழமை அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுக்கான உடற்பயிற்சிக்குரிய உடைகளும் வழங்கப்பட்டன.அத்தோடு இயற்கை விவசாயி திரு மகேஸ்வரநாதன் கிருசன் அவர்களினால்,தயாரிக்கப்பட்ட இலைக்கஞ்சியும் அதனைத் தொடர்ந்து மதியச் சிறப்புணவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்,பிரான்ஸிஸ் வசிக்கும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
























