யாழ் போதனா வைத்தியசாலையில்,தலைப்பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்-விபரங்கள் இணைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில்,தலைப்பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

தலைப் பிரசவத்துக்காக கடந்த-03 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த-03 ஆம் திகதி ஒரே சூலில் மூன்று ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது குறித்த நான்கு குழந்தைகளும் , இளம் தாயும் சுகதேகியாக காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். கட்டுவன் மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற இளம் பெண்ணே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தவராவார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux