தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற,அல்லைப்பிட்டி வீராங்கனை-விபரங்கள் இணைப்பு!

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற,அல்லைப்பிட்டி வீராங்கனை-விபரங்கள் இணைப்பு!


அகில இலங்கை ரீதியில், 29.02.2020 சனிக்கிழமை அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற, 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்,பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்,யாழ் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வி ரவீந்திரன் சுஜீபா அவர்கள்,3ம் இடத்தினை வென்று வெண்கலப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

இப்போட்டியில் 25 மாவட்டத்தைச் சேர்ந்த,25 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

செல்வி ரவீந்திரன் சுஜீபா அவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

செல்வி ரவீந்திரன் சுஜீபா அவர்களை,அல்லையூர் இணையத்தின் சார்பிலும்,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply