அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் பிறந்த தினம் கடந்த -19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்றாகும்.

திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள்-நோய் நொடியின்றி,எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும்-அவரின் குல தெய்வமான-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனை வேண்டி இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-19.01.2020. ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தாயகத்தில் மூன்று ஆதரவற்ற இல்லங்களில் வசிப்பவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

Leave a Reply