
அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று நினைவுகூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!












