மண்டைதீவு ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில் புனரமைப்பு பணிகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவு ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில் புனரமைப்பு பணிகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!


யாழ் மண்டைதீவில் அழிவிலிருந்த,ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில்(சிறுப்புலம் முருகன்) ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த யுத்தகாலங்களுக்கு முன்னர் அழகுச் சோலையில் அமர்ந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த மண்டைதீவு சிறுப்புலம் முருகன்- யுத்தம் இடம்பெற்றபோது  மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால்,ஆலயம் கைவிடப்பட்டு-பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டிருந்ததாகவும்-யுத்த அமைதிக்குப்பின்னர் பற்றைகள் இயந்திரங்களின் மூலம் வெட்டி அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்ட போதிலும்-ஆலயம் மிகக்கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,ஆலயத்தினை முழுமையாக புனரமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும்,ஆலய தர்மகத்தா ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.அத்தோடு ஆலயத்தை அண்டிய பகுதிநிலங்களை வெளியாருக்கு விற்பதற்கு சிலர் முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாலயத்தினை முழுமையாகப் புனரமைக்க அதிகளவு நிதி தேவைப்படுவதனால்,புலம்பெயர் மண்ணில் வசிக்கும்- இக்கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள்  உதவிட முன்வருமாறு அவர் வேண்டுகோள் ஒன்றும் விடுத்துள்ளார்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux