மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!


யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்தசெய்தியாகும். 
மண்டைதீவுக் கிராமத்தில்   மிகவும் வறுமையான  நிலையில் வசிக்கும் வெளிநாட்டு உதவிகள் இல்லாத- முதியோர்கள்,  வலுவிழந்தோர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட (15) பதினைந்து குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக கடந்த  2017 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் முதல்   தலா ஒரு குடும்பத்தினருக்கு இரண்டாயிரம்  ரூபாக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் பயனாளிகள் இணைக்கப்பட்டு கடந்த 2018 மார்கழி மாதம் முதல் 24 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது.

நாம்  புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,ஊரில் வாழ்கின்ற ஆதரவற்றவர்களின் துயர்துடைத்திட  வேண்டும் என்று நினைத்து செயலாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு சிற்றப்பலம் ஜெயசிங்கம் அவர்களின் சிந்தனையில் தோன்றி வலுப்பெற்று-அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் பூரண ஒத்துளைப்புடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பணியினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதனால் -புலம்பெயர் நாடுகளில் வாழும் மண்டைதீவு மக்கள் இப்பணியில் இணைந்து கொண்டு ஆதரவற்ற  எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு  பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

குறிப்பு:- இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்தால்  மேலும் வலுவிழந்து இருப்பவர்களையும் இணைத்துக் கொள்ளலாம் ,மாதாந்தம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்குள் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்றாவது ஆண்டில்….
இத்திட்டமானது கடந்த 2017 கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு-தற்போது
மூன்றாவது ஆண்டில், மொத்தம் 26 பயனாளிகளை உள்வாங்கி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் நீங்களும்,இணைந்துகொண்டு-ஆதரவற்றுத் தவிக்கும்-எம் கிராமத்து உறவுகளின் துயர் துடைத்திட முன்வருமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு…

திரு சிற்றம்பலம் ஜெயசிங்கம் 0014163190409  (viber)-கனடா

திரு சிவகுருநாதன் நவரூபன் (மன்னவன்)0014163169909 (vibre)-கனடா

திரு வைரவநாதன் தயாகரன் (அப்பன்) 0014164503801
(vibre)-கனடா


திரு செல்லையா சிவா (www.allaiyoor.com) 0033651071652 (viber)-பிரான்ஸ்

முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux