மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்கப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்கப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


தீவகம் மண்கும்பானில், மீண்டும் சட்ட விரோத மணல் அகழ்வு…
தடுத்து நிறுத்தப் போராடிய ஊர் மக்கள்….
கைகலப்பில் பலர் படுகாயம்
மணல் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரத்திற்கு, தீ வைப்பு….
ஒரே இரவில் 100 லோட் மணல் மண்கும்பானிலிருந்து, நகருக்குள் கடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டம்..


தீவகம் மண்கும்பானில் மண் அகழ்வில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உயர்மட்ட அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டாமென்றும் பொலிசாருக்கு ஊர்காவற்துறை நீதிபதி யூட்சன் உத்தரவு .

மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களை தாக்கி காயப்படுத்தியமை மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களை தீயிட்டு எரித்தமை தொடர்பாக ஆறு இளைஞர்கள் மீது ஊர்காவற்துறை பொலிசாரால் குற்றஞ்சாட்டப்பட்டு இன்று12.12.2019 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர் .

இவர்கள் அனைவரையும் பிணையில் விடுவித்த நீதவான் இன்று முதல் தீவகத்தின் எந்த பகுதியிலும் மண் அகழ்வு நடவடிக்கையில் எவரேனும் ஈடுபடமுடியாதவாறு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீவகம் வடக்கு & தெற்கு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றைய வழக்கினை பார்வையிடுவதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux