அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ஆர் அவர்களின் பேரன் செல்வன் கிரிஷின்  பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்!படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ஆர் அவர்களின் பேரன் செல்வன் கிரிஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்!படங்கள் இணைப்பு!


01-பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரி்ஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு 10.12.2019
செவ்வாய்க்கிழமை இன்று -அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஆதரவற்றோர்களுக்கான அன்னதானப் பணியின்-772 வது தடவையாக இன்றைய தினம் இச்சிறப்புணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வன் கிரிஷ்,எமது அறப்பணிக்கு தொடர்ந்து உதவி வருபவருமாகிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ஆர் அவர்களின் அன்புப் பேரன் என்பதுடன் மேலும் இப்பிறந்தநாளை முன்னிட்டு மூன்று அறப்பணி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

02-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரிஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை (10.12.2019) முன்னிட்டு-மண்கும்பானைச் சேர்ந்த,சமூக ஆர்வலரும்,வேலணை பிரதேசசபையின் உறுப்பினருமான,திரு செல்லப்பா பார்த்தீபன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,இப்பகுதியில் வசிக்கும்,குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,மண்கும்பான் கிராம சேவையாளர், .மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும்,மகளீர் சங்கத் தலைவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

03-கிளிநொச்சி செஞ்சோலை மாதிரிக்கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!
அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரிஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு-கொடிய வறுமையில் வாழும்,கிளிநொச்சி செஞ்சோலை மாதிரிக்கிராமத்தில் வசிக்கும் 17 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் இன்றைய தினம் (10.12.2019)வழங்கி வைக்கப்பட்டன.


செல்வன் கமல் கிரிஷ் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் இறையாசி வேண்டி-இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

Leave a Reply