
யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும்,சுவிஸில் வசித்து வந்தவரும்-மண்டைதீவு இணைய தளத்தினை ஆரம்பித்து பல வருடங்களாக,மண்டைதீவு கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தவருமாகிய,அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி) 11.11.2019 அன்று அனுஸ்டிக்கப்பட்டது.
அன்றைய தினம் சுவிஸில் அமைந்துள்ள ,அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி கிரியைகள் இடம்பெற்றதோடு,மேலும் அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மூன்று நேரச் சிறப்புணவும் வழங்கப்பட்டன .
அத்தோடு அமரர் சிவசிறிகுமரன் அவர்களின் பிறப்பிடமான,மண்டைதீவிலும் கடந்த 21.11.2019 சனிக்கிழமை அன்று அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றைய தினம் அன்னாரின் குலதெய்வமான,மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்,ஆத்மசாந்தி பூஜை இடம்பெற்று,பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள திவாகர் நற்பணி மண்டபத்தில்,அஞ்சலி நிகழ்வும் மதியபோசனமும் இடம்பெற்றது.
மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்கள் வருகை தந்து அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன்-மதியபோசனத்திலும் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.
அன்னாரின் நினைவாக,வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய உள்வீதிக்கான மண்டபத்தின் முழுமையான கூரை வேலைகளுக்கு பல லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!














































