
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14.11.2019 வியாழக்கிழமை இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக மேலும் தெரிய வருகின்றது.
ரயில் மோதி பலியான நிஷாந்தன்,அல்லைப்பிட்டி-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் ஆறுமுகம் குணரத்தினம் (குணம் தேனீர் கடை-மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி) அவர்களின் அன்புப் பேரனாவார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் இன்று (13.11.2019) புதன் காலை 9 மணியளவில் புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட ஒருவர் புகையிரதத்துடன் மோதிப் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் விபத்துக்குள்ளாகி படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியானார்.
இதன்போது நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே பலியானார்.
மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

