கிளிநொச்சியில் இன்று 12.11.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.