
பிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை)முன்னிட்டு, (11.11.2019) திங்கட்கிழமை அன்று-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி…
அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சாந்தபுரத்தில் வசிக்கும், நடக்க முடியாத,20 வயதான,செல்வன் ச.ஜோன்சன் கிருசன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியாக,65ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கறவை மாடும்,கன்றும்,இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரால்,11.11.2019 இன்றையதினம்,
இவ்வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.











