மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவ சிறிகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவ சிறிகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும்,சுவிஸில் வசித்து வந்தவரும்-மண்டைதீவு இணைய தளத்தினை ஆரம்பித்து பல வருடங்களாக,மண்டைதீவு கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தவருமாகிய,அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி) 11.11.2019 அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

சுவிஸில் அமைந்துள்ள ,அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி கிரியைகள் இடம்பெறுவதோடு,மேலும் அன்றைய தினம் அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மூன்று நேரச் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

}

Hit Counter provided by technology news