அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்! முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்! முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் ,கடந்த 26.09.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வு கடந்த 26.10.2019 சனிக்கிழமை அன்று அல்லைபிட்டியில் நடைபெற்றதுடன் மேலும் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய வளாகத்தில் அன்னாரின் சிலை அமைக்கப்பட்டு,அன்றைய தினம் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

எங்கள் கிராமத்துப் பெரியவர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள்- அல்லைப்பிட்டியில் உயிரோடு வாழ்ந்தவரை,இலை வைத்துச் சோறு போட்டவர்-அவர் இறைவனடி சேர்ந்த பின்பும் சிலையாகி நின்று சோறு போடுபவர்.என்பதனை நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,தாயகத்தில்,ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாணவர்கள் வசிக்கும் மூன்று இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

முழுமையான வீடியோப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux