பரிஸில் நடைபெற்ற,செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற,செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!


பிரான்ஸில் கடந்த 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற, புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவைச் சேர்ந்த, திரு, திருமதி சிறிதரன் தம்பதிகளின் புதல்வி செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் -அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தாயகத்தில் மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.

01-கிளிநொச்சி தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலம்
02- அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்லம்
03-கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்ட வலுவூட்டல் இல்லம்
ஆகிய இல்லங்களில் வசிப்பவர்களுக்கே ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வி சிறிதரன் சானுஜா அவர்களுக்கு, ஆசீர்வாதத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பரிஸில் 27.10.2019 அன்று நடைபெற்ற,செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத்தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

செல்வி சிறிதரன் சானுஜா,மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,அமரர்கள் மதியாபரணம்-அரசம்மா தம்பதிகளின் அன்புப்பூட்டியாவார் என்பது மேலதிக தகவலாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux