பரிஸில்,மேடையில்   கும்பகர்ணனாய் வேடமிட்டு உயிர் துறந்த மகாகலைஞன் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில்,மேடையில் கும்பகர்ணனாய் வேடமிட்டு உயிர் துறந்த மகாகலைஞன் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

திருமறைக்கலாமன்றத்தின் பிரெஞ்சுக் கிளையின் தலைவரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமான டேமியன் சூரி அவர்கள் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பரிஸ் நகரில் மரணடைந்த சம்பவம் சக கலைஞர்களையும் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்றுமாலை இந்தச் சோகசம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமறைக்கலாமன்றம் நடத்திய கலைவண்ணம் என்ற நிகழ்வில் இராமாயணத்தை மையப்படுத்திய நாட்டுக்கூத்து ஒன்றில் சக கலைஞர்களுடன் இணைந்து டேமியன் சூரி அவர்கள் நடித்துக்கொண்டிருந்தார்.கும்பகர்ணன் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் சண்டைக்காட்சி ஒன்றில் தரையில் விழுந்து மரணிக்கும் கட்டத்துக்காக மேடையில் வீழ்ந்தவர் உண்மையிலேயே மேடையில் மரணமடைந்து விட்டார்.

மரணிக்கும் கட்டத்துக்காக உணர்வுபூர்வமாக நடித்தவர் மேடையில் உண்மையிலேயே மரணமடைந்தமை சக கலைஞர்களையும் பார்வையாளர்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.குறித்த நாட்டுக் கூத்து நிகழ்வை எழுதி இயக்கியவரும் டேமியன் சூரியன் என்பதால் கூத்துநிகழ்வு முடிந்ததும் இயக்குனரை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு சக கலைஞர்கள் அவருக்குத்தெரியாமலேயே பலமான ஏற்பாடுளை செய்திருந்தனர். இந்த நிலையில், அந்த மதிப்பளிப்பை பெற்றுக்கொள்ள முடியாமலேயே இடம்பெறதமலேயே கலைஞர் டேமியன் சூரி மரணத்திமை சக கலைஞர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அல்லையூர் இணையத்தின் இயக்குனரும்,அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டாளருமாகிய திரு சிவா செல்லையா அவர்களும் அன்றைய கலைவண்ணம் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது….

நான் பெற்ற பெரும் பாக்கியமும்,பெரும் துயரும்!

கடந்த 20.10.2019 ஞாயிறு அன்று பரிஸில் நடைபெற்ற,பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் கலைவண்ணம் நிகழ்வில்,மேடையிலேயே சரிந்து வீழ்ந்து மரணத்தை தழுவிக் கொண்ட மகாகலைஞன் எஸ்.டேமியன் சூரி அண்ணா அவர்கள் வீழ்ந்த அதே மேடையில் நானும் சிறுவேடமேற்று தோன்றியிருந்தேன்.
மனோ அண்ணா அவர்கள் இயக்கிய “இலங்கை வேந்தன்”என்ற கதையரங்கு காட்சிப்படுத்தலில்,கலைஞர் இரா குணபாலன் அவர்கள் நடிக்க,நானும் அவருடன் சிறு வேடத்தில் தோன்றியிருந்தேன்.
ஒப்பனை அறைக்குள் எனக்கு அருகில் நின்று-கும்பகர்ணன் வேடத்திற்காக,சூரி அண்ணா அவர்கள் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.
இன்னும் சில மணித்துளிகளில்,சூரி அண்ணாவின் உயிரை காலன் கவர்ந்து விடுவான் என்று யாருக்குத்தான் அப்போ தெரிந்திருக்கக்கூடும்.
இடைவேளையின் பின் வேறு ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததனால்,பிரிய மனமில்லாமல் மண்டபத்திலிருந்து வெளியேறியிருந்தேன்.
அதுகூட ஒரு மகா கலைஞனின் மரணத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்று இறைவன் வகுத்த திட்டமோ என்னவோ தெரியவில்லை.
ஆனாலும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாக அமரர் மகாகலைஞன் டேமியன் சூரியண்ணா அவர்களின் மரணம் அமைந்து விட்டது.

Leave a Reply