அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்து மயானத்தில்,அமைக்கப்பட்ட சுடலை வைரவர் ஆலயம்-விபரங்கள் இணைப்பு!

அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்து மயானத்தில்,அமைக்கப்பட்ட சுடலை வைரவர் ஆலயம்-விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டி இந்து மயானத்தில், அன்மையில் காலமான அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 85000.00 ரூபா செலவில், அன்னாரின் குடும்பத்தினரால்,சுடலை வைரவர் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், வேலணை பிரதேச சபையினால்,தகனமேடை அமைக்கப்பட்டதுடன் மேலும் தகரக்கூரையும் பொருத்தப்பட்டிருந்த நிலையில்- தற்போது கடல்காற்று காரணமாக
தகரக்கூரை முழுவதும் தூக்கி வீசப்பட்டு வெட்டவெளியாக மயானம் காட்சி தருகின்றது.

மழைக்காலத்தில் சடலங்களை தகனம் செய்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரலாம்-என்பதால்
வேலணை பிரதேச சபை விரைவாக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு,
தகரக்கூரை அமைத்துத் தரவேண்டும் என்று இந்துமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இம்மயானத்துக்கு செல்லும் பிரதான வீதியின் இருமருங்கும் பற்றைகள் வளர்ந்து போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை உள்ளதுடன் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துசெல்வதில் சிரமம் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.

இதை வேலணைபிரதேச சபையினர் கவனிப்பார்களா????

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux