புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவாக,ஒரேநாள் ஒன்பது இடங்களில் சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவாக,ஒரேநாள் ஒன்பது இடங்களில் சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,தீவகம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியை,முன்னிட்டு-அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,10.10.2019 வியாழக்கிழமை அன்று -தாயகத்தில் ஆதரவற்ற மாணவர்கள்,முதியோர்கள் மற்றும் அங்கவீனர்கள் வசிக்கும்-ஒன்பது இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பேராதரவோடு,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரால்,ஆதரவற்றவர்களுக்கான அன்னதானப்பணியானது,700 தடவைகளைத் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவாக வழங்கப்படவுள்ள சிறப்புணவு வழங்கலுடன்-711வது தடவைகளை,எமது பசிபோக்கும் பணி தொட்டு நிற்கின்றது.

தமிழர் தாயகப்பிரதேசத்தில்,யாழ்ப்பாணத்திலிருந்து,அம்பாறை வரை-எமது பணியானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux