
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான,திரு மாவை சோ. சேனாதிராசா அவர்களினால் ஒதுக்கீடு செய்ப்பட்ட இருபது லட்சம் ரூபா நிதியில் ,தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச கிளையினரின் மேற்பார்வையில் தீவக பிரதான வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, மண்டைதீவு சந்தியிலும், மண்டைதீவின் உட்பகுதியிலும், அதனைத் தொடர்ந்து, அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து,அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையார் வீதி வரையும் இவ்மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.







