அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்- இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்- இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!


(திரு செல்லத்துரை நடேசபிள்ளை
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும் )

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(உடையார்) சொர்ணம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையக்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜந்தினி(லண்டன்), சுதாஜினி(பிரான்ஸ்), துஷ்யந்தன்(பிரான்ஸ்), கஜநேசன்(லண்டன்), கமலினி(லண்டன்), பிரியதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவவிநாயகம்(விதானையார்), தையல்நாயகி, வேலாயுதப்பிள்ளை, சிவயோகலக்‌ஷ்மி, நடேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகர், சிவகுமார், சங்கீதா, சியாமலா, விஜயானந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருஷ்ணாம்பாள், காலஞ்சென்ற ஞானசம்பந்தர், இராசம்மா, காலஞ்சென்ற இரத்தினசபாபதி(தபால் அதிபர்- அல்லைப்பிட்டி), சச்சிதானந்தம், கந்தையா(சிறாப்பர்- வேலணை), செல்வலக்‌ஷ்மி மற்றும் புவனேஸ்வரி, சுயம்புலிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராமநாதன், மற்றும் சீவரட்ணம், ஜெயசிறி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகலரும்,
நேத்திரா, கஜீஸ், வைஷ்ணவன், தாரிக்கா, தர்சனா, கர்சினி, சபரிகரிஸ், சாம்பவி, வர்ஷன், யஸ்விக்கா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-09-2019 வியாழக்கிழமை முதல் 28-09-2019 சனிக்கிழமை வரை 130, இராசாவின் தோட்டம், நல்லூர் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 வீடு
Phone : 
+94212225921
 
கஜன் – மகன்
Mobile : 
+94776342489
 
துஷியந்தன் – மகன்
Mobile : 
+94771345980
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-29.09.2019 ஞாயிறு காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux