மண்கும்பான் முருகன் ஆலய தேர்த் திருவிழாவின்  வீடியோப்பதிவும்,வில்லுமண்டப கட்டிடப் பணிகளும்,விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் முருகன் ஆலய தேர்த் திருவிழாவின் வீடியோப்பதிவும்,வில்லுமண்டப கட்டிடப் பணிகளும்,விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரால்,ஆலயத்திற்கான சுற்றுப்பிரகார கொட்டகை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக,உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும்,வசிக்கும்-முருகமூர்த்திப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதியுதவி கோருவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் உதவியினை,பணமாகவோ அல்லது கொட்டகை அமைப்பதற்குத் தேவையான பொருளாகவோ தந்துதவுமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் முதல்-கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,இச்சுற்றுக் கொட்டகை அமைப்பதற்கு,மிகக்கூடிய தொகையாக,3கோடி ரூபாக்கள் வரை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் உதவிகளை விரைந்து வழங்கி,முருகப்பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறும்,ஆலய நிர்வாகம்- அல்லையூர் இணையத்தின் ஊ டாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புகளுக்கு…..

தலைவர் திரு விவேகானந்தராஜா—0094770366140
செயலாளர்…திரு தில்லைச்சிவம்…0094788247659
……0094779011841
வெளிநாட்டு தொடர்புகளுக்கு….
திரு ஈசன் (லண்டன்)00447726593610

கீழே பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ள அடியார்கள் கட்டிடப்பணிக்கு உதவ முன்வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

01- ஸ்ரனிஸ்லாஸ்-சந்திரா (பிரான்ஸ்)
10 லட்சம் ரூபாக்கள்

02-திரு-திருமதி விமலநாதன்-ஜெயசுதா (ஜெர்மனி)
3 லோட்டு கற்கள்

3-திரு,திருமதி பாலசுப்பிரமணியம்-புஸ்பா( பிரான்ஸ்)
300 பைக்கற் சீமேந்து

04- திரு-திருமதி தங்கேஸ்வரன்-ராகிணி (பிரான்ஸ்)
300 பைக்கற் சீமேந்து
05-திரு,திருமதி விஜேந்திரன்-பிறேமா (பிரான்ஸ்)
1100 ஈரோக்கள்
06-திரு சாம்பசிவம் கோகிலதாஸ் (பிரான்ஸ்)
200 ஈரோக்கள்
07-திரு ,திருமதி இராசலிங்கம்-வாணி
நன்கொடை
08-திரு சதாசிவம் ஜெயசீலன்(ரமணி)சுவிஸ்
50 ஆயிரம் ரூபாக்கள்
09-திரு அமரசிங்கம் வசி (இலங்கை)
50 ஆயிரம் ரூபாக்கள்
10-மைத்திலி யுவலஸ்-திரு நடராஜா கஜன் (இலங்கை)
203 பைக்கற் சீமெந்து
11-திரு வீரசிங்கம் வரன் (இலங்கை)
50 பைக்கற் சீமெந்து


மேலும் வரும் 06.09.2019 வெள்ளிக்கிழமை அன்று வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளதுடன்,மேலும் கடந்த 14.09.2019 சனிக்கிழமை அன்று புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆறுமுகசுவாமி தேரேறி வீதியுலா வந்த காட்சியும் இடம்பெற்றது.

கீழே கொடியேற்றக் காட்சிகளின் பகல் மற்றும் இரவுத் திருவிழாக்களின் வீடியோப் பதிவும்,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளன.


வீடியோ அனுசரணை…
கொடியேற்றம்-திரு ஏரம்பமூர்த்தி. ஈசன்-லண்டன்

தேர்த்திருவிழா-திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன்-லண்டன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux