தனது தந்தைக்காக,செயற்கை கையை தயாரித்த மாணவன்-மல்லாவியில் நெகிழ்ச்சி சம்பவம்-விபரம் இணைப்பு!

தனது தந்தைக்காக,செயற்கை கையை தயாரித்த மாணவன்-மல்லாவியில் நெகிழ்ச்சி சம்பவம்-விபரம் இணைப்பு!

மல்லாவி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்காக பத்தாண்டுகள் முயற்சி செய்து செயற்கை கை ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார். 

துஷ்யந்தன் என்ற இளைஞர் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வருகின்றார். குறித்த  மாணவனின் தந்தை கணபதிப்பிள்ளை பத்மநாதன் பத்தாண்டுகளுக்கு முன்னர் உழவு இயந்திரத்தில் இருந்து வீழ்ந்தமையால் கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தந்தையின் கையை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் தனது தந்தைக்கு செயற்கை கையை பொருத்த பல வைத்தியசாலைக்கு சென்று கேட்டபோது சத்திர சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டது. செயற்கை கையைபொருத்துவது என்பது முடியாத காரியமாகவே பத்மநாதனின் குடும்பத்திற்கு இருந்தது.

இந்நிலையில் பத்மநாதனின் மகன் துஷ்யந்தன் அன்றிலிருந்து தந்தைக்காக செயற்கைக் கையை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில, நீண்ட கால முயற்சியின் பின்னர் செயற்கை கையொன்றை தயாரித்து தனது தந்தைக்கு பொருத்தியுள்ளார்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news