தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  அவர்கள் திறந்து வைத்தார்.படங்கள் இணைப்பு!

தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் திறந்து வைத்தார்.படங்கள் இணைப்பு!


தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்று 10.09.2019 அன்று திறந்து வைத்தார்.
வேலணை தெற்கு துறையூர் ஐயனார் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முதலாவதாகத் திறந்துவைத்தார்.  பாடசாலையின் பிரதி அதிபரின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் வலயக் கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரியும் வைத்தியர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அதிபர் விடுதியும் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் சுப்பிரமணியம் கனகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன்,  தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், வேலணை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி கி.சாரதாதேவி ஆகியோரும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் வேலணை பிரதேசசபை உறுப்பினர் அசோக்குமார் பார்த்தீபன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு கல்லூரி சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேசசபை உறுப்பினர் க.நாவலன் தனது சொந்த நிதியில்  விளையாட்டு அரங்கு , அதிபர் விடுதி செல்லும் பாதை என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழேதான் இரண்டு பாடசாலைகளினதும் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

நன்றி-புதிய சுதந்திரன் இணையம்

Leave a Reply

}

Hit Counter provided by technology news