கடற்படையினரின் பாதுகாப்புடன்-தேரேறி வீதியுலா வந்த-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை….வீடியோ,படங்கள் இணைப்பு-

கடற்படையினரின் பாதுகாப்புடன்-தேரேறி வீதியுலா வந்த-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை….வீடியோ,படங்கள் இணைப்பு-

அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா-கடந்த 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 16.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை பெருநாள் திருப்பலியைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் தேர்மீது அமர்ந்து வீதியுலா வந்த, புனித கார்மேல் அன்னை-பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதுடன் திருவிழா நிறைவடைந்தது.

அல்லையூர் இணையத்தின் 600 வது தடவையாக இடம்பெற்ற, சிறப்பு அன்னதான நிகழ்வு!
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகத்தாவும்,அல்லைப்பிட்டி உபதபால் நிலைய அதிபரும்,அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய,அமரர் இரத்தினசபாபதி-திருமதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவாக,அன்னார்களது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில், 16.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று இச்சிறப்பு அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


வீடியோப்பதிவு மற்றும் நிழற்படப்பதிவுக்கான,நிதி அனுசரணையினை அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

Leave a Reply