உலகப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 02.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெற்ற, இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இரதோற்சவமும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோப்பதிவு-நயினை ஸ்ரீ அபிராமி வீடியோ
நிழற்படங்கள்-செல்வன் ஜங்கரன் சிவசாந்தன்











