மண்டைதீவுச் சந்தியில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவுச் சந்தியில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது-விபரங்கள் இணைப்பு!


பீடி இலை மற்றும் புகையிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். மண்டைதீவு பகுதியில் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ஒருதொகை பீடி இலை மற்றும் புகையிலையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

பீடி இலைகள் மற்றும் புகையிலை ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றபோதே, நேற்று (17) காலை இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த லொறியொன்றை மண்டைதீவு சந்தியில் வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் பீடி இலைகள் மற்றும் புகையிலை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்து 1,359 கிலோகிராம் பீடி இலைகள் 44 பொதிகளாக பொதி செய்யப்பட்ட நிலையிலும், 1,034 கிலோகிராம் புகையிலை 31 பொதிகளாக பொதி செய்யப்பட்ட நிலையிலும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பீடி இலை மற்றும் புகையிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கலேவல பகுதியை சேர்ந்த 37 மற்றும் 47 வயதுகளையுடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர்

தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள் மற்றும் புகையிலை, லொறியுடன் சந்தேகநபர்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

Leave a Reply