யாழ் தீவகத்தை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்….

யாழ் தீவகத்தை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்….

வெளிநாட்டிலிருந்து தீவகத்தின்,மண்டைதீவு,அல்லைப்பிட்டி,சாட்டி வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளை நோக்கி வரும் வெளிநாட்டு பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் இந்த இடத்திற்கு வருவதோடு இங்கு ஒளிப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை, இந்த மாத இறுதியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் வந்து தங்குவதாக யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடுகட்ட ஆரம்பிக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை என்றும் இவை அவுஸ்ரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜிரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

}

Hit Counter provided by technology news