மண்டைதீவு முகப்புவயல் முருகன்,தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

மண்டைதீவு முகப்புவயல் முருகன்,தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!


யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து  விஷேட திருவிழாக்கள் தினமும் நடைபெற்று-01.07.2019 திங்கட்கிழமை அன்று காலை  10 மணிக்கு எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

மண்டைதீவு முகப்பு வயல் முருகப்பெருமானின் தேர்த்திருவிழாவினைக் காண-மண்டைதீவிலிருந்தும்-மண்டைதீவுக்கு வெளியேயிருந்தும்-அதிகமான பக்தர்கள் வந்திருந்ததாக மேலும் அறியமுடிகின்றது.

அனுசரணை….
மண்டைதீவு முகப்பு வயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,வீடியோப் பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கும் மற்றும் நலிவுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலும்-இப்பதிவு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

Leave a Reply