யாழ்.மண்டைதீவில்,கடற்கரை சுற்றுலா மையம்,  திறந்து வைப்பு- விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்.மண்டைதீவில்,கடற்கரை சுற்றுலா மையம், திறந்து வைப்பு- விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில், யாழ் மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இந்தக் கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த (30.06.2019)ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக, திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்-

இதில் படகு சவாரி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு- பி.ப 4.00 மணியிலிருந்து பி.ப 6.30வரைக்கும் இச் சேவையை மக்கள் பெறக்கூடியதாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சுற்றுலாத் தளத்தை பார்வையிட பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply