இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 முன்னே சென்ற பார ஊர்தியின் சக்கரத்திலிருந்து காற்று வெளியேறியதில், சடுதியாக குறித்த பார ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பார ஊர்திக்கு பின்புறமாக சென்ற மற்ற பார ஊர்தி பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் பாரஊர்தியில் பயணித்த சாரதி உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-வீரகேசரி இணையம்

Leave a Reply

}

Hit Counter provided by technology news