அமெரிக்க மோகத்தினால்,அவலமாய் மரணிக்கும்,மனிதர்களின்  கண்ணீர்க் கதைகள்…படியுங்கள்!

அமெரிக்க மோகத்தினால்,அவலமாய் மரணிக்கும்,மனிதர்களின் கண்ணீர்க் கதைகள்…படியுங்கள்!

உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று பரிதாபமாக உயிரை விட்டுள்ளனர் இரண்டு சிறுமிகள். இதில் ஒருவர் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த குரூப்ரீத் கவுர், மற்றொருவர் எல்சால்வாடார் நாட்டைச் சேர்ந்த வலேரியா. முதல் சிறுமி குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் உயிரிழந்தார். இரண்டாவது சிறுமியோ அதிகம் தண்ணீர் இருக்கும் ஆற்றில் சிக்கி மரணமடைந்தார்.

சொந்த நாட்டில் வாழ வழியில்லாதவர்கள் அந்நிய நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுவது வாடிக்கையான ஒன்றுதான். அதில் ஒருசிலரின் வாழ்க்கைதான் நன்றாக இருக்கிறது. சிலரது வாழ்க்கையோ சோகமயமானதாக மாறிவிடுகிறது.

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டுகிறார் ட்ரம்ப். ஆனாலும் பல தடைகளைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

மத்திய அமெரிக்க நாடான எல்சால்வாடார் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கார் அல்பெர்டோவிற்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது கனவு. சொந்த நாட்டில் வருமானம் சரியில்லை. அமெரிக்கா சென்றால் பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து தனது இரண்டு வயது மகள் வலேரியா மார்டினெஸ் உடன் ஆற்றை கடந்து செல்ல திட்டமிட்டார். ஆனால் விதி வலியது. ஆற்றில் இறங்கியவர்கள் அதில் மூழ்கி சடலமாக கரை ஒதுங்கியுள்ளனர். இருவரின் சடலமும் ஆற்றில் மிதக்கும் அந்த போட்டோ இப்போது வைரலாகி காண்பவரின் கண்களை குளமாக்கி வருகிறது.

ஆஸ்கருக்கு தனது மகள் வலேரியா மார்டினெஸ் மீது கொள்ளை பிரியம். அவளும் அப்பா இல்லாமல் ஒரு நொடி கூட தனித்திருக்க மாட்டாள். அதனால்தான் மரணத்தினால் கூட அவர்கள் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

சட்ட விரோதமாக நுழைய முடிவு எல்சால்வாடார் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கார் அல்பெர்டோ என்பவரும் அப்படித்தான் தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் நுழைய அனுமதி கேட்டு காத்திருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. சட்ட விரோதமாக நுழைய திட்டமிட்டு தனது மனைவியை விட்டு விட்டு இரண்டு வயது மகளை டிசர்ட்டுக்குள் நுழைத்துக்கொண்டு பயணப்பட்டார். அப்பாவும் மகளும் இந்த பயணத்தில் பலரும் இணைந்துதான் சென்றிருக்கின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சர்ட்டிபிகேட் எதையும் அவர்களால் தர முடியாத காரணத்தினால்தான் சட்ட விரோதமாக உள்ளே நுழைகின்றனர். காரணம் அமெரிக்காவிற்கு சென்றால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம்தான். மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதியில் இறங்கிய அவரும் பிழைத்துக்கொள்வோம் என்றே நம்பினார். விதி வலியது. இருவருமே மரணத்தை தழுவியிருக்கின்றனர்.

மரணமடைந்த இருவர் உயிரை துச்சமென மதித்து ஆற்றில் இறங்கியிருக்கின்றனர். நீந்தி கடந்த போது அமெரிக்க கரைப்பகுதியில் மகளை இறக்கி விட்டு விட்டு மனைவியை அழைத்துச் செல்ல திரும்பியிருக்கிறார் ஆஸ்கர். ஆனால் அப்பாவை விட முடியாத இரண்டரை வயது குழந்தை வலேரியா திடீரெனை ஆற்றில் குதித்து விட்டாள். உடனே மகளை காப்பாற்ற ஆஸ்கர் முயன்றும் மூச்சுத்திணறி உயிரை விட்டு விட்டாள். மகளே போன பின்னர் யாருக்காக உயிர் வாழ வேண்டும் நினைத்தாரோ என்னவோ ஆஸ்கரும் நீரில் மூழ்கி விட்டார்.

மரணத்தின் தருணத்தில் கூட பிரியாத தந்தையும் மகளும் ரியோ கிராண்டே நதியில் சடலமாக மிதந்தனர். பிரிக்க முடியாத மரணம் ஆஸ்கருக்கு தனது மகள் வலேரியா மார்டினெஸ் மீது கொள்ளை பிரியம். அவளும் அப்பா இல்லாமல் ஒரு நொடி கூட தனித்திருக்க மாட்டாள். அதனால்தான் மரணத்தினால் கூட அவர்கள் இருவரையும் பிரிக்க முடியவில்லை. அப்பாவின் கழுத்தை கட்டியபடியே உயிரிழந்திருக்கிறது அந்த குழந்தை. அந்த புகைப்படம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சட்ட விதி மீறல் இந்த மரணம் மிகவும் வருத்தமானது. இறந்து போன இளைஞன் தனது மகளுக்கு மிகச்சிறந்த அப்பாவாக இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். சட்டங்களை மிறி நதியில் குதித்து அமெரிக்காவில் நுழைய முயன்றதே இந்த மரணத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப். சிதைந்த அமெரிக்க கனவு மரணமடைந்த ஆஸ்கரின் அம்மாவின் துயரமோ அளவிடமுடியாதது. கண்ணீர் மல்க தனது மகனின் கனவு குறித்து பேட்டியளித்துள்ளார்.

எங்கள் நாட்டில் வறுமை சூழல் அவனை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் கடுமையாக உழைத்து சொந்த வீடு வாங்கி விடலாம் என்று நம்பினான். நான் பலமுறை தடுத்தேன். அமெரிக்கா வாழ்க்கை வெறும் கனவாகி விடும் என்றேன் அவன் கேட்கவில்லை. எனது மகனின் அமெரிக்க கனவு இப்படி சிதைந்து போய் விட்டதே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இது போன்ற ஒரு சம்பவம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுதல். மகளுடன் அமெரிக்கா பயணம் ஆற்றில் குதித்து மரணமடைந்த ஆஸ்கர் கதை அப்படி என்றால் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி குருப்ரீத் கவுர் தாகத்தில் உயிரிழந்திருக்கிறாள். பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாய் அமெரிக்காவிற்குள் நுழைய இடைத்தரகர்கள் மூலம் மெக்ஸிகோ எல்லைக்கு சென்றார் கூடவே தனது 6 வயது மகளுடன் பயணப்பட்டார். கொதிக்கும் வெயிலில் கொடிய பயணம் பல இந்தியர்களுடம் இவர்களுடன் பயணப்பட்டனர்.

செவ்வாய்கிழமையன்று அரிசோனா பாலைவனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது 108 டிகிரி வெப்பம் தகித்தது. நாவறட்சி அதிகரித்தது. சிறுமியை உடன் வந்தவர்களுடன் ஒப்படைத்து விட்டு தண்ணீரைத் தேடி பயணப்பட்டார் அந்தப் பெண். ஆனாலும் தாகத்தில் தவித்த அந்த சிறுமி மரணமடைந்தாள். 22 மணிநேரம் கழித்துதான் மகளின் மரணத்தை அறிந்து கொண்டார் அந்தப் பெண். மகளுக்கு சிறந்த வாழ்க்கை இந்த சிறுமியின் மரணம் பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனது மகளுக்கு மிகச்சிறந்த வாழ்க்கை அமைத்துக்கொடுக்க விரும்பினோம். அதற்காகவே அமெரிக்காவிற்கு பயணப்பட்டோம். ஆனால் எங்களின் மகளே இப்படி எங்களை விட்டு விட்டு போய்விட்டாள் என்று கதறுகின்றனர்.

அந்த சிறுமியின் தந்தை 2013ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கில் வசித்து வருகிறார். குடும்பத்தை அழைத்துச்செல்வதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை எனவேதான் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றிருக்கிறார் கவுரின் அம்மா. பணத்திற்காக ஆபத்தான பயணம் அவசியமா வாழ்க்கையில் பணம் அவசியம்தான். ஆனால் அமெரிக்க கனவில் சட்ட விரோதமாக ஏஜென்டுகளின் ஆசை வார்த்தையை நம்பி ஆபத்தான வழியில் செல்வது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற பயணங்கள் உயிரிழப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கின்றனர் எல்லையோர காவல்துறையினர். ஒரு சிறுமியின் மரணம் தண்ணீர் இல்லாமல் நிகழ்ந்திருக்கிறது. இன்னொரு சிறுமியின் மரணம் தண்ணீர் அதிகமாக இருந்ததால் நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் சோகம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux