பிரான்ஸில் நடைபெற்ற,அழகிய தாடிப் போட்டியில்,ஆறாயிரம் ஈரோக்களை முதற்பரிசாகப் பெற்ற,ஈழத்தமிழர்-படங்கள்  விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் நடைபெற்ற,அழகிய தாடிப் போட்டியில்,ஆறாயிரம் ஈரோக்களை முதற்பரிசாகப் பெற்ற,ஈழத்தமிழர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது.

தீவகம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து மறைந்த,திருஞானசம்பந்தர் அவர்களுடைய நெருங்கிய உறவினரே- திருப்பதி வீடியோ மகேசன் அவர்களாவார்.மிகுதி விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் என்றவுடனே, பளிச்சென்று வெளிப்படுவது அவர்களது தாடியும், மீசையும் தான். அவ்வாறு ஆசையுடன் தாடியும், மீசையும் நீளமாக வளர்ப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு பாரீசில் நடைபெற்றது.

15 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில், 86 போட்டியாளர்கள் பங்கேற்று, விதவிதமான மீசை அலங்காரத்துடன் தோன்றினர். இதில் டெடி போனட் என்பவர், தனது மீசைக்குள் 2 பேஸ்பால்களை அடக்கி வைத்திருந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போட்டியில் கலந்து கொண்ட,ஈழத்தமிழரான, திரு மகேஸ்வரதாஸ் பிரதாஸ் அவர்கள் -(இவரது தந்தை பரிஸில் ,திருப்பதி வீடியோ மகேசன் என எல்லோராலும் நன்கு அறியப்பட்டவராவார்) முதல் சுற்றில் 86 தாடியழகர்களுடன் போட்டியிட்டு, பின்னர் 8 தாடியழகர்களுக்கு மத்தியில் 24 cm கொண்ட சிறந்த தாடி அழகனாக தெரிவு செய்யபட்ட ஓர் ஈழத்தமிழ் மகனாவார்.

கடந்த 4 வருடங்களாக தாடி வளர்க்கும் 30 வயதை கொண்ட பிரதாஸ் தனது திருமணத்தின் பொழுதும் தாடியோடு தான் துணைவியின் கரம் பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரத்தில் இந்த போட்டிக்கு இவருடைய வேலை நிறுவனத்திற்கு வந்து செல்லும் இத் துறைசார்ந்த ஓர் பத்திரிகை நிருபரே கட்டாயப்படுத்தி இவரை அழைத்துச் சென்றார்- என்பதோடு 6000€ கள் ரொக்கப் பணப் பரிசினை பெற்றுக் கொண்டார்-என்பதும் மேலதிக தகவல்களாகும்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news