யாழ் தீவகத்தில்,குடிநீரைப் பெற்றுக் கொள்வதில்,பல சிரமங்களை எதிர் கொள்ளும் மக்கள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,குடிநீரைப் பெற்றுக் கொள்வதில்,பல சிரமங்களை எதிர் கொள்ளும் மக்கள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவக கிராமங்களான,மண்டைதீவு ,வேலணை,புங்குடுதீவு உட்பட பல கிராமமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதில், பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மண்கும்பான் பகுதியிலிருந்தே, தீவகத்தின் பல கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
மண்கும்பானிலிருந்து தொடர்ச்சியாக,நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதனால், நீர் ஊற்றுக் குறைவடைந்து வருவதுடன்-நீரின் சுவையும்,மாற்றமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மண்கும்பானிலிருந்து குளாயின் ஊடாகவும்-பவுசர்களின் மூலமும்-தொடர்ச்சியாக தண்ணீர்எடுத்துச் செல்லப்படுவதனால் -விரைவில் நீரின் தன்மை மாற்றமடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும்,அப்படியான நிலை ஏற்பட்டால்-தீவக கிராம மக்கள் குடிநீரைத் தேடி இடம்பெயரவேண்டிய நிலை வரலாம்-என்றும் மேலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave a Reply