யாழ் கொட்டடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் உஸ்மானியா பாடசாலைக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கரவண்டியொன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீதும் மோட்டார் சைக்களில் சென்ற இரண்டு மாணவர்கள் மீதும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் முச்சக்கரவண்டி மோதியில் குறித்த மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த கால்வாயொன்றில் விழுந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மாணவர்களே கவலைக்கிடமான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.