நல்லூர் கந்தனுக்கு  அதியுயர் பாதுகாப்பு -படங்கள் விபரங்கள் இணைப்பு!

நல்லூர் கந்தனுக்கு அதியுயர் பாதுகாப்பு -படங்கள் விபரங்கள் இணைப்பு!


யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு அநாமதேய கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,  அக்கடிதத்தில் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாகவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இதனை அடுத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ். பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  
குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் பொலிஸாருக்குஆளுநர் அறிவித்ததை அடுத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, அங்கு அதிகளவான இராணுவத்தினரும்  விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux